வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பல இலச்சம் ரூபா பெறுமதியான போதை பொருட்கள் திருட்டு

(க.சரவணன் )

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் பொலிசார் காவலில் கடமையில் இருந்த நிலையில் கட்டிட கூரையை உடைத்து உள் நுழைந்த திருடன் அங்கு அலுமாரியில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பல இலச்சம் ரூபா பெறுமதியான போதை பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள குறித்த நீதிமன்றத்தை வழமைபோல நேற்று புதன்கிழமை மாலை கடமைகள் முடிவிற்ற பின்னர் நீதிமன்ற கதவுகளுக்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையில் வழமைபோல நீதிமன்ற கதவை திறந்தபோது அங்கு கூரையை உடைத்து உள்நுழைந்த திருடன் அலுமாரியை உடைத்து  அதில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை திருட்டுப் பேயுள்ளதை கண்டுள்ளனர்

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார்  அங்கு சம்பவதினமான நேற்று நீதிமன்ற கட்டடித் தொகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காவலாளி ஒருவரும் காவலுக்கு இருந்துள்ள நிலையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதையடுத்து அங்கு தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கெண்டுவருகின்றனர்.