மட்டக்களப்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தின அனுஸ்டிப்பு- .

(கனகராசா சரவணன் )

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160 தேசிய வீரர்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட சிஸே;;ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வாயிலில்   அமைக்கப்பட்டுள்ள  நினைவு தூபியில் இன்று வியாழக்கிழமை (21) மலர் வைத்து  அஞ்சலி செலுத்தினர்.

கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோகன  ஆலோசனையின் கீழ் மாவட்ட போக்குவரத்து பொறுப்பதிகாரி சரத்த சந்திர தலைமையில் இடம்பெற்றது

இதில் அதிதியாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்  அத்தியட்சகர் அமல் எதிரிமான ட 14 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தி யோகத்தர்கள், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவுகள்  கலந்து கொண்டனர். இதன்போது  சிரேஸ்ட பொலிஸ்  அத்தியட்சகர் பொலிஸ் திணைகள கொடியேற்றப்பட்டு உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தி நினைவு தூபியில் மலர் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார் .

அன்று முதல் இன்று வரை 3955 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 417  பொலிசார் உயிரிழந்துள்ளதுடன் அவர்களை நினைவும் கூறும் முகமாக வருடந்தோறும் அனுஸ்;டிக்கப்பட்டு வருவது   குறிப்பிடத்தக்கது