ரைட் டு லைப் நிறுவனத்தினால் மனித உரிமை சிகிச்சை நிலையம் மன்னாரில் திறப்பு.

(வாஸ் கூஞ்ஞ)   மன்னாரில் மனித உரிமை சிகிச்சை நிலையம் ரைட் டு லைப் நிறுவனத்தினால் திங்கள் கிழமை (18) மன்னார் தலைமன்னார் பிராதன வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இருபது வருடங்களாக மனித உரிமைகள் தொடர்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் மன்னார் அலுவலகம் இதில் பிரதம அதிதியாக கலந்த கொண்ட மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரைட் டு லைப் நிறுவனத்தின் பணிப்பாளர் பிலிப் திஸாநாயக்கா , திட்ட இணைப்பாளர் பிரசாந்தன் , திட்ட அலுவலகர் மதுஷாலினி மற்றும் இந்நிறுவனத்தின் மன்னார் இணைப்பாளர் எஸ்.டிலக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 25 நபர்களுக்கு ஒரு மனித உரிமை பாதுகாவலரின் பொறுப்புக்கள் மற்றும் பங்கு தொடர்பான கலந்துரையாடல் அமர்வும் இடம்பெற்றது என்பதும் கறிப்பிடத்தக்கது.