விவசாயிகளுக்கு வங்கி கணக்குக்கு நேரடியாக வரப்போகும் பணம்.

(எருவில் துசி) விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபா நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.