ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை திருக்கோணேசர் ஆலய நிருவாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கானது எவ்வித இடைக்கால தடையுமின்மி நிருவாக சபை இயங்கலாம் என மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
என திருகோணேஸ்வரர் ஆலயத்தின் 2023 ம் ஆண்டு தொடக்கம் 2026 ம் ஆண்டுக்கான நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (19)மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் இன்றைய தினம் திருகோணணலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றில் நீதிமுறை மீளாய்வு மனு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எமது நிருவாக சபைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் இடைக்கால நிருவாகத்துக்கு தடை விதிக்கப்பட்டு எமது நிருவாகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனவே எதிர்வரும் 24 பங்குனி மாதம் 2024 தொடக்கம் தொடர்ச்சியாக 18 நாட்களுக்கு மகோட்ஷவம் வெகு விமர்சையாக இடம் பெறும் எனவும் தெரிவித்தார்.