( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச பொதுமக்களுக்கு
காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று (18) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சமுகமளித்திருந்தார்.
நிகழ்வில் 100 பேருக்கு காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்திலேயே அதிக கூடிய காணி உரிமை பத்திரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை திருக்கோவில் பிரதேசத்தில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட காணிஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மற்றும் பயிர் செய்யும் நூறு பொதுமக்களிற்கான காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண காணி உதவி ஆணையர் கேஎல்எம். முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. அனோஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் , காணி உத்தியோகத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் திரு. பரமானந்தம்,சமுக சூழல் பாதுகாப்பு உத்தியோத்தர் பி.சீலன் , ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இங்கு 150 பேருக்கு காணி உரிமை பத்திரங்களை வழங்கி வைத்திருந்தார். அவர் கலந்து கொள்ளும் இரண்டாம் நிகழ்வு இதுவாகும்.
இவ்வாறு இரண்டாம் தொகுதி காணி பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாணத்திலேயே இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருக்கோவில் பிரதேச செயலகமானது கடந்த 2020ஆண்டு 800க்கு மேற்பட்ட காணி அளிப்பு பத்திரம் தயாரித்து கிழக்கு மாகாணத்திலே முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை. மேலும் இவ் வெற்றி கரம் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் முயற்சியால் கிடைக்க பெற்ற முதலிடமாகும் என்பன குறிப்பிடத்தக்கது..