கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ தேர்த் திருவிழா.

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திப் பெற்ற கல்முனை நகர் அருள் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் பிரமோற்சவ திருவிழா கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா இடம்பெற்று
 பிரம்மோற்சவ தேர்த் திருவிழா எதிர்வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக நகர் வலம் வர இருக்கின்றது.
 அதேபோல மறுநாள் 25ஆம் தேதி திங்கட்கிழமை  தீர்த்தோற்சவம் இடம் பெறும்.
கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு இருக்கு வேத உபாசகர் வாமதேவ சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ சீ. குககணேசக் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது என ஆலய தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேள் ஆசிரியர் தெரிவித்தார்.