மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் யுக்த்திய பரிசோதனையின் திடீர் நடவடிக்கை முன்னெடுப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில்  களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுக்த்திய சுற்றி வளைப்பு பரிசோதனையின் ஒரு அங்கமாக தீடீர் பரிசோதனை நடவடிக்கையினை  14.03.2024 திகதி முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகள், உள்ளிட்ட வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பயணிகள் இறக்கப்பட்டு மோப்பநாய்களுடன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  போதைப்பொருளை சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்து களுதாவளையிலும் இந்த யுக்திய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொலிசாரால்  போதைப்பொருள் தடுப்பதற்கான, இஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.