தீர்வுகளும் பதில்களும் எம்மிடமே உள்ளன

எதிர்க்கட்சித் தலைவர்

வங்குரோத்தான நாட்டில் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வாக்குறுதிகளை வழங்கும் கொள்கைகளை நாம் பொதுவாக நிராகரிக்க வேண்டும்.குறைந்த நிதி வளத்தில் அதனை சரியாக முகாமைத்துவம் செய்து  அடைவுகளை பெற்றெடுப்பது தலைவர்களினது திறன்களை பொறுத்தே அமையும். இதனை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே நிரூபித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கேளிக்கை,கூத்து,நாடகங்கள் தேவைப்படுமாக இருந்தால் அதற்கு பொருத்தமானவர்கள் நாமல்ல.நாட்டுக்கு தேவை பேச்சுகளோ, சோபனங்களோ அல்ல,செய்து காட்ட முடியுமான தலைவர்களே தேவை.பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகளையும் பதில்களையும் வழங்கும் தலைவர்களே தேவை. சோபனங்களையும்,கூத்துக்களையும் நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை. இவ்வேளையில் நாட்டுக்கும் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கும் தேவையான தீர்வை வழங்கக்கூடிய,நாடு வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து வெளியேறும் வழியை காட்டக் கூடிய தரப்பின் தேவையே அதிகம் காணப்படுகிறது.இதற்கான தீர்வை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி என்றும் தயாராகவே இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 2000 புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்வில் ஓர்அங்கமாக நேற்று(13) தலாவ சந்தைத் தொகுதி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கலாவெவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் சுரங்க ரத்நாயக்க அவர்களின் முயற்சியின் கீழ் இந்த பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு),மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் பெருமளவிலான உறுப்பினர்கள் இன்று இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

2019 இல் அழைத்து வரப்பட்ட அசகாய வீரர் இறுதியில் கார்ட்போர்ட் வீரர் ஆனார்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டு நலன் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியதில்லை. 2019 ஆம் ஆண்டிலும் தாம் உண்மையையே  பேசியதாகவும், மக்கள் படும் துன்பத்தை துடைக்க நாட்டுக்கு அசகாய வீரர் தேவை என்று ஒரு மாவீரனை கொண்டு வந்து கடைசியில் அவரை தெரிவு செய்தனர்.

இறுதியில் அவர் கார்ட்போர்ட் வீரனாகி நாட்டையே வங்குரோத்தாக்கினார். தற்போது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வை முன்வைக்காது வீராப்பு பேசும் தலைவர்களும் கார்ட்போர்ட் வீர்ர்களும் நிறைந்துபோயுள்ளனர், அவரைப் போலவே இன்றைய கார்ட்போர்ட் வீர்ர்களும்.மக்கள் எதிர்நோக்கி வரும் எந்தவொரு பிரச்சினைக்கும் அவர்களிடம் தீர்வில்லை.

எந்தவித வேலைத்திட்டமும் இல்லை.இவ்வாறான நிலையிலையே மக்களை சந்திக்க வருகின்றனர்.

எனவே 2019 ஆம் ஆண்டைப் போல மீண்டும் ஏமாறாது சரியானை முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

திருடர்களை ரணில் பாதுகாத்தாலும் சஜித் ஒருபோதும் திருடர்களை பாதுகாக்க மாட்டார்!

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சர்களின் திருடர் கூட்டத்தை பாதுகாக்க பாடுபட்டாலும், சஜித் ராஜபக்ச திருடர் கூட்டத்தை பாதுகாக்க ஒரு போதும் செயல்படமாட்டார். திருடர்களை பிடித்து அவர்களிடமிருந்து நாட்டுக்கு செலுத்த வேண்டிய நட்ட ஈட்டை பெற்று தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

🟩முட்டாள் ஆட்சியாளரின் முட்டாள்தனமான முடிவுகளால் நாடே பரிதவித்து நிற்கிறது!

நாட்டில் பாரிய நீர்ப்பாசனம், நடுத்தர நீர்ப்பாசனம், சிறிய நீர்ப்பாசனம் உள்ளிட்ட மகாவலி நீர்ப்பாசன முறையில் விவசாயம் செய்து, அண்மைக்காலம் வரை தமது சொந்த பலத்தினால் யாருக்கும் சரணடையாமல் மரியாதையான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களே இந்த எல்லைப்

பிரதேசத்தில் இருக்கும் மக்கள்.இந்நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகள் தெரிவு செய்த ஒரு தலைவரால், பல முட்டாள்தனமான முடிவுகள் எடுக்கப்பட்டு விவசாயமும், விவசாயிகளும் அழிந்துபோயுள்ளனர். இந்த முட்டாள்தனமான முடிவுகளினால் சிறு குழந்தை, கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர் சந்ததியினர், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என பலரும் பெரும் நெருக்கடிக்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சரியான பாதையில் செல்வோம்.கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, சரியான பயணத்தை, மக்கள் சார்பான, பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, வழக்கமான பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றாது, உண்மையும் யதார்த்தமும் கொண்ட நவீன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தை முன்வைக்க நாம் எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நாட்டின் விவசாத்துறை விருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதனூடாக தேசிய விவசாய அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.