தனிமையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவனின் மரணம்.

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

(வாஸ் கூஞ்ஞ)  தலைமன்னார் பகுதியில் தனிமையில் ஒரு படகில் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்று சடலமாக மீட்கப்பட்டவர் நீரில் மூழ்கியதால் எற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை (12) தலைமன்னார் பியர் மீன்பிடி துறையிலிருந்து வெளிக்கள இயந்திரப் படகு ஒன்றின் மூலம் காலை ஏழு மணிக்கு மீனவர் ஒருவர் தனிமையில் வடகடலில் மீன் பிடிக்காகச் சென்றுள்ளார்.

பின் கரைக்கு வந்து பிடிக்கப்பட்ட மீனை கரையில் கொடுத்து விட்டு மீண்டும் பத்து மணிக்கு கடலுக்குச் சென்றுள்ளார். இதன் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மரியச் செல்வம் செங்கோல் பர்ணாந்து (வயது 55) என்பவரே மரணத்தை தழுவிக் கொண்டவராவார்.

இவரின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனையில் இவர் ஏற்கனவே இருதய வியாதி கொண்டவர் எனவும் மேலும் இவர் சில வியாதிகளுக்கு உள்ளாகி இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடலுக்குள் வீழந்தபின் இவர் சென்ற படகு கடலில் நீண்ட நேரமாக ஆளிலில்லாமல் தனது பாட்டில் சுற்றிக் கொண்டு இருந்ததை கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடலில் இருந்த மீனவர்கள் படகு சம்மாட்டிக்கு தெரிவித்ததைத் தொடர்ந்தே கடலில் வீழ்ந்தவரையும் படகையும் மீட்டுள்ளனர்.

பின் கடற்படையினரின் உதவியுடன் இவரை தலைமன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவரின் உடற்கூற்று பரிசோதனையில் நீரில் மூழ்கியமையால் எற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் மரண விசாரைனையை மேற்கொண்ட மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர்.நசீர் உடற்கூற்று பரிசோதனைக்குப் பின் இவரின் உடலை உறவினரிடம் ஒப்படைக்க பொலிசாருக்கு கட்டளைப் பிறப்பித்தார்.