அடுத்தவர்களில் தங்கி இருக்கும் நிலைக்கு மாற்றமாக, நிலையான வறுமை ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டில் பாரிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அடுத்தவர்களில் தங்கி இருக்கும் நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு நிலையான வறுமை ஒழிப்பு திட்டத்தைத் நடைமுறைப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இது ஜனசவிய திட்டத்தின்  முன்னோக்கிய அடுத்த கட்டமாகும்.இதன் மூலம் ஒரு குடும்பத்தை நடத்தும் குடும்பத்தின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைகளுக்கு வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படும். ஏழ்மை நிலையை அடைந்தோர் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மாதிரி இணைக்கப்படும். ஏற்றுமதிச் சந்தையை மையமாகக் கொண்டு வீட்டின் அங்கத்தவர்களான குடும்பங்களின் தாய், தந்தையர் உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் டொலரில் பணம் சம்பாதிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 85 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் அநுராதபுரம்,

கலாவெவ,தலாவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(13) இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிள்ளைகளிடம் பொறாமைத் தனத்தை காட்டாதீர்கள்.பாடசாலை மாணவர்களிடம் எந்தவகையான பொறாமைத் தனத்தையும் காட்டாதீர்கள்.பிரபஞ்சம் வேலைத்திட்டம் தொடர்பாக போலியான கதைகளை கட்டமைக்காதீர்.

தான் பகிர்ந்தளித்து வழங்கும் நன்கொடைகள் குறித்து பல்வேறு கதைகள் கூறப்பட்டு வருகின்றன,அரசியலுக்காகவும் தேர்தலுக்காகவுமே இவ்வாறு நன்கொடைகளை வழங்குவதாகக் கூறி வருகின்றனர். இவ்வாறு பகிர்ந்தளிக்கும் எனது பணியை பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காத 1994 ஆம் ஆண்டு தொட்டே மேற்கொண்டு வருகின்றேன்.

கொழும்பு உயர்தரப் பாடசாலைகள், உயர்தரக் கல்லூரிகள், சர்வதேச பாடசாலைகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் தரப்பினருக்கு பிரபஞ்சம் வேலைத்திட்டம் பயனளிக்காது. எனவே இவ்வாறான நன்கொடைகள் இத்தைகயவர்களுக்கு தேவையற்றனவையாகவே தோன்றும் என  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில பாடசாலைகளில் சரியான போசாக்கான உணவுகள் இல்லாமல் குழந்தைகள் மயங்கி விழும் நிலை உள்ளது. மதிய உணவு வழங்குவதாக கூறும்போது, ​​பகிர்ந்தளிக்கிறேன், சலுகைகளை வழங்குகிறேன் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த வளங்கள் நாட்டில் முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே வழங்கப்படுகின்றன.மக்கள் கோரும் முறைமை மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்து நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்விக்கு பங்களித்துள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது அரசியலை விட மனநிறைவோடு செய்யும் பணி என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.