இந்து சமுத்திர வலய நாடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் மஹ்மூத் மாணவி ஹஸ்னா கிழக்கு மாகாண மட்டத்தில் இரண்டாம் நிலை.

எம்.எம்.ஜெஸ்மின்)
இந்துசமுத்திர வலய நாடுகள் கூட்டமைப்பு (IORA) ஆனது; இந்துசமுத்திரத்தை எல்லையாகக் கொண்டுள்ள 23உறுப்பு நாடுகளையும் 12 பேச்சுவார்த்தை பங்குதாரர்களையும் கொண்டஒரு நிறுவனமாகும்.

கடந்த வருடம் இந்துசமுத்திர வலய நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை இலங்கை ஏற்றுக்கொண்டது. இலங்கையின் தலைமைத்துவத்தின் கீழ், இந்து சமுத்திர வலய நாடுகள் அமைப்பு கல்வி அமைச்சுடன் இணைந்து “எதிர்கால சந்ததியினருக்கான நிலை பேறான இந்து சமுத்திரம்” எனும் தொனிப் பொருளின் கீழ் முதலாவதாக இடம்பெற்ற “IORA தினம்”, ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச், 2024 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஒருங்கிணைப்பில் கௌரவ. ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு, காலி முகத்திடலில் இடம் பெற்றது.
“எதிர்கால சந்ததியினருக்கான இந்து சமுத்திரம்” எனும் தலைப்பின் கீழ் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 12 உயர்தர கலைப் பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஹபுல் ஹஸ்ஸன் பாத்திமா ஹஸ்னா என்பவர் கிழக்கு மாகாண மட்டத்தில் சிரேஷ்ட பிரிவில் 02ஆம் நிலையினைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற சித்திரங்கள் இந்நிகழ்வில் இடம்பெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கடல் சுற்றுப்பயணம் மற்றும் 70 காட்சிக்கூடங்களில் இடம்பெற்ற போட்டிகள் மற்றும் செயலமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்று தனக்கான சான்றிதழ் மற்றும் பெறுமதியான பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.