மட்டக்களப்பில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கிய நிலையில் தலைமறைவாகிய நபர்

handcuffed arrested man behind prison bars. copy space

14 வருடங்களின் பின் கைது.

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் இரு சிறுவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில்; கைதாகி நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த நிலையில்  உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 14 வருடங்களாக தலைமறைவாகி மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் இருந்து வந்த குற்றவாளியை இன்று திங்கட்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் முடித்த நிலையில்; மனைவியின் இரு சிறுவர்களை அடித்து சித்திரவரை செய்த குற்றச்சாட்டில் 2009 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு  ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ள நிலையில் மட்டு உயர் நீதிமன்றில் கடந்த 2016-2-25 ம் திகதி குறித்த நபரை குற்றவாளி என இனங்கண்டு கொண்ட நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும்  20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் அதனை 3 மாதத்தில் செலுத்த தவறின்  3 மாதங்கள் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் தலா ஒரு இலச்சம் ரூபா வீதம் 2 இலச்சம் ரூபாவை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கி அவருக்கு திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது .

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடிவிறாந்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் சாஜன் அரசரட்டணம் கோகுலன், பெலாலிஸ்கான்ஸ்டபிள் தேவா ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் பாதிக்கப்பட் சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் முஸ்லீம் மதத்திற்கு மதம் மாறி அங்கு ஹூசையன் என பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்துவந்துள்தை கண்டறிந்தனர்

இதனையடுத்து பொலிஸ் சாஜன் அரசரட்டணம் கோகுலன் குறித்த குற்றவாளியடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சாமத்தியமாக பேசி இன்று பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளார்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.