“தமிழைப் போற்றி சைவம் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளிலான அறநெறிக் கல்வி ஆண்மீக செயற்பாடு.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கல்முனை,பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு ,மட்டக்களப்பு சிவத்தொண்டர் திருக்கூடம் ஆகியன இணைந்து அம்பாறை மாவட்டத்தில் அறநெறி கல்வியை ஊக்கப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுதுச் செல்கின்றது.
அந்த வகையில் கல்முனை மணற்சேனை கிராமத்தில் பாலமுருகன் அறநெறி பாடசாலையில் அண்மையில் அறநெறிகளை ஆண்மீக செயற்பாடு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆண்மீக தியான குருஜி என்.தேவநேசன், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன், உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.லக்குணம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.