எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கௌரவிப்பு.

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கௌரவிப்பு.

எருவில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் கா.பொ.த
சாதாரன தர பரீட்சையில் ஒன்பது A சித்தியை பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ் தின போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவி மற்றும் பாடசாலைக்கு நீண்ட தூரம் பயணிக்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

குறித்த கௌரவிப்பு நிகழ்வு இன்று(10) இடம்பெற்றது.
கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அ.வசீகரன் அவர்களுடைய தலைமையில் சிக்கன கடனுறவு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் மற்றும் கண்ணகியம்பாள் ஆலய பரிபால சபை தலைவர் மா. சுந்தரலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர் சா.பரமானந்தம் மற்றும் கோயில் போரதீவு அதிபர் சா.பரமானந்தம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் ஏனைய ஆலயங்களில் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்ததோடு கல்வி சமூக விருத்தி ஒன்றியத்தின் செயல்பாடுகள் பல்வேறு துறைகளிலே நடைபெற்றாலும் மென்மேலும் இந்த சமூகத்தினுடைய வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது சாணக்கின் அவர்கள் கருத்துரையாற்ம் போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தும் அபிவிருத்தி திட்டங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை இது மன வேதனைக்குரிய விஷயம் எருவில் கிராமத்திற்கான கலாசார மண்டபம் அமைப்பு தொடர்பாக நான் பல முயற்சியில் எடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன அரசாங்கத்தில் இருக்கின்ற உறுப்பினர்களினால் இதனை செய்விக்க முடியாமல் உள்ளது என தெரிவித்தார்.