பெரியநீலாவணை ஹெப்பி ஹிட்ஸ் மாணவர்களுக்கு வரவேற்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் ஹெப்பி ஹிட்ஸ் (Happy Kids) முன்பள்ளி பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில், ஹெப்பி ஹிட்ஸ் பாடசாலையின் தலைவர் இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.எம்.ஹாறூன் தலைமையில் நடைபெற்றது.

புதிய மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் புதிய மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் பிரபல சமூக சேவையாளர் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஹாரிஸ் (நவாஸ்) பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

அகரம் கற்பிக்கப்பட்டு, புதிய மாணவர் வரவேற்கப்பட்ட இந்த நிகழ்வில்
சிரேஷ்ட சட்டத்தரணி எப்.எம்.அமீறுல் அன்சார் உட்பட ஹெப்பி ஹிட்ஸ் பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.