பிரதேச சர்வமதக் குழுவின் சர்வதேச மகளிர் தினக் கொன்டாட்டம்.

(ஹஸ்பர் ஏ.எச்_ அச்சுதன்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றைய (09/03/2024) தினம் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை பிரதேச சர்வ மத குழு உடன் இணைந்து “மதங்களில் மகளிர்” என்னும் தொனிப்பொருளில் மகளிர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதன் போது மகளிர் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான விழிப்புணர்வு உரையும் இடம்பெற்றது.
 மேற்படி, நிகழ்வானது கிண்ணியாவில் அமைந்துள்ள சேவிங் ஹியூமானிட்டி பவுண்டேஷனின் ஒருங்கிணைப்பில் திருகோணமலை ஜூப்ளி மண்டபத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம வளவாளராக சட்டத்தரணி பாத்திமா நஸ்ரின் அவர்கள் கலந்து கொண்டு இலங்கையில் காணப்படும் மகளிர் உரிமைகள் மற்றும் அவர்களின் சலுகைகள், அது மீறப்படும் போது முறைப்பாடு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கும் இதன் போது இடம் பெற்றது.
மேலும், இந்நிகழ்வில் திருகோணமலை பிரதேச சர்வமதக்குழு உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்லின மக்களும் கலந்து சிறப்பித்தமை குறி்பிடத்தக்கது.
மேலும், சேர்விங் ஹியுமானிட்டி பவுண்டேஷன் உடைய பிரதம நிறைவேற்று அதிகாரி, மற்றும் அதனது பொதுச் செயலாளர், மற்றும் அதனது ஊழியர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியாக பெண்களுக்கான ஒரு வலையமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.இதன் மூலம் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள், பெண்கள் நலன் திட்டங்கள் அவர்களுக்கான வாய்ப்புக்களை பகிர்ந்து கொள்ளும் தளமாகவும் இது செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.