ஜனாதிபதிக்கு மொட்டுவினால் அழுத்தம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுப்பதாக அறியமுடிவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திரு அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது முன்னணி அரசியல் ரீதியில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் இவ்வாறான செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சதித்திட்டங்கள் மூலம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சீர்குலைப்பது முற்றிலும் சாத்தியமற்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.