ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்

மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இன்னும் முடிவெடுக்காத நிலையில், அது தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் கட்சியின் பொறிமுறைக்கு சேதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களுடன் செல்லாமல் பொதுவான அரசியல் கருத்துடன் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.