சமுத்திர தீர்த்தம் எடுத்துவந்து ஆதி சிவனாலயத்தில் சிவலிங்க அபிஷேகம்!

( வி.ரி.சகாதேவயராஜா)
காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விரதத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (8) வெள்ளிக்கிழமை மாலை சமுத்திர தீர்த்தம் எடுத்துவந்து ஆதி சிவனாலயத்தில் சிவலிங்க அபிஷேகம் செய்யப்பட்டது.
ஊர்வலத்துடனான இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிவலிங்கத்திற்கு ஆலயத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பக்தர்கள் சமுத்திர தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர்
.
பிரதேச செயலகம் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆதிசிவன் ஆலயம் ஆகியன இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
காலையில் மாணவரிடையே குருத்தோலை பின்னுதல் நிறைமுட்டிவைத்தல் கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளில் போட்டி இடம்பெற்றது.
அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.