சந்தனமடு ஆற்றில் இரு சடலங்கள்

(நாசர் ஏறாவூர்)

சிவராத்திரி பூசைக்கு கோயிலுக்குச் செல்வதாகமனைவியிடம் கூறிவிட்டு  மதுபோதையுடன்ஆற்றில் குளித்த இளம்குடும்பஸ்தர்கள் இருவர்  சேற்றுக்குழியில் புதையுண்டு உயிரிழந்தசம்பவமொன்று       மட்டக்களப்பு–  சந்தனமடுஆற்றில் 08.03.2024 இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்புசித்தாண்டிபிரதேசத்தைச்சேர்ந்த                       ஒருகுழந்தையின் தந்தையான 33 வயதுடைய கூலித்தொழிலாளியான தெய்வநாயகம் திசாகரன்மற்றும்               ஒரு குழந்தையின் தந்தையானஉழவு இயந்திர சாரதியான            24 வயதுடைய  சிறிதரன் லிகிதரன் ஆகிய இருவருமேபலியானவர்களென சந்திவெளி பொலிஸார்தெரிவித்தனர்.

இவர்கள் தமது நண்பர்கள் ஐந்துபேருடன்  ஆற்றில்குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு பகலுணவு பகிர்வு செய்வதற்குத் தாமதம்ஏற்பட்டதனால் மதுபானம் அறுந்திவிட்டு இந்தஇருவரும் மீண்டும் ஆற்றில் குளித்தவேளைசேற்றுக்குழியில் மூழ்கியதாகத்தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து உடலங்கள்மீட்கப்பட்டு சந்திவெளி வைத்தியசாலைக்குக்கொண்டுசென்றதையடுத்து மரணம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர்விசாரணைளை மேற்கொண்டார். சந்திவெளிபொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தனர்.

இவர்களது மனைவிமார் மற்றும் தந்தைமார்களும்சடலங்களை அடையாளங்காட்டினர்.

இதையடுத்து சடலங்கள் பிரேதபரிசோதனைக்காகமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குஅனுப்பப்பட்டன.

பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதங்கள்நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம்ஒப்படைக்கப்படவுள்ளன.