எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தான் மக்களுக்கு எதையாவது பகிர்ந்தளிப்பதாக குற்றம் சாட்டி பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு பெயர்களைச் சொல்லி அழைத்தாலும், இவ்வாறு பகிர்ந்தளிப்பதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கப்படுகிறது, என்றாலும் அதில் சுகாதாரம், கல்வி மற்றும் நல் வாழ்வுக்கான உரிமைகள் குறிப்பிடப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் கீழ் சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பன சேர்க்கப்படும். பெயருக்கு இலவச சுகாதார சேவை இருந்தால் மட்டும் போதாது.அது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். விமசர்னங்களை முன்வைக்கும் உயர் வர்க்கத்தினர் எந்தக் குறையும் இல்லாது ஆடம்பரமான சுகாதார முறைகளை பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எல்லா இடங்களிலும் கூட்டங்களை நடத்தி, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என கூறுவதாக இருந்தால், இலவச சுகாதார சேவை பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பகிர்ந்தளிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்காமல் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால், வங்குரோத்து எண்ணங்களிலிருந்து முதலில் விடுபட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட மூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலைக்கு 46 இலட்சம் ரூபா பெறுமதியான பல சுகாதார உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் இன்றைய(08) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Incubator Infant Warmer மற்றும் இரண்டு பேபி வார்மர் இயந்திரங்களும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அன்புக்குரிய பாரியார் ஜலனி பிரேமதாசவின் கரங்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவ விசேட துறை கொழும்பிற்கு வெளியே உள்ள வைத்தியசாலைகளிலும் இந்த வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். காசல் வைத்தியசாலைக்கு வழங்கியது போன்று ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இரண்டு இலட்சம் வாக்குகளை விட இரண்டு இலட்சம் தாய்மார்களுக்கு நல்லது செய்வது எனக்கு முக்கியம்.
இந்த சாதனங்களால் எமது நாட்டு குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏதாவது நல்லது விளைந்தால் அதுவே எனக்கு போதுமானதாகவும். முன்னதாக, 2021 ஆம் ஆண்டு காசல் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனரைப் பார்க்கச் சென்றபோது, இரண்டு இலட்சம் தாய்மார்கள் இதனால் பயனடைந்ததை அறியக் கிடைத்தது. இரண்டு இலட்சம் வாக்குகளை விட இரண்டு இலட்சம் தாய்மார்களுக்கு நல்லது கிட்டுவதை காண்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பேரூந்துகளில் பெண்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தும் எந்தத் தேவையும் தமக்கு இல்லை. வங்குரோத்தான நாட்டில், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி பேரூந்துகளை வாடகைக்கு எடுத்து, பெண்களை திரட்டி, பெண் உரிமைகள் குறித்து உரைகளை எம்மாலும் நடத்தலாம். உரைகளுக்கு அப்பால் சென்று செயலில் காட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று போன்ற ஒரு நாளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் உயிரைக் காக்கும் இயந்திரங்களை நன்கொடையாக வழங்க முடிந்தமை தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.