வன்னி ஹோப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்

வன்னி ஹோப்  நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம் இன்று வன்னி ஹோப் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர்   ரஞ்சன் சிவஞானசுந்தரம் தலைமையில் இன்று (08)  திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது.
வன்னி ஹோப்  நிறுவனத்தினுடைய செயற்பாடுகளை மேலும் கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கும் நோக்குடன் கிழக்கு மாகாணத்திற்கான அலுவலகம்   திருகோணமை மாவட்டத்தில் கோலாகலமாக திறந்த வைக்கப்பட்டது.
வன்னி ஹோப் நிறுவனம் பல்வேறு வகையான மனிதாபிமான செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களையும் இன மத மொழி பிரதேச வேறுபாடின்றி நாட்டின் வடக்கு கிழக்கு மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் முன்னெடுத்து வருகின்றது.
 இந் நிகழ்வில்  பிரதம அதிதியாக வன்னி ஹோப் அவுஸ்திரேலியா  நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், சிறப்பு அதிதிகளாக IMHO நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் . ராதா கிருஷ்ணன்,   சமூக சேவைகள் திணைக்களத்தின்கிழக்கு மாகாண
தொழிற் பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஜீவிதன் சுகந்தினி,
இலங்கைக்கான பணிப்பாளர் என். முரளிதரன் ,
  வன்னி ஹோப் நிறுவனத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள், வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்,  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் , பாடசாலை மாணவர்கள் பயனாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.