(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பாடல்தளமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இவ் வருடம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இதற்கான சகல ஏற்பாடுகளும் தற்பொழுது பூர்த்தி அடைந்த நிலையில் காணப்படுகின்றது என இதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை 8ந் திகதி நடைபெற இருக்கும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற இருக்கும் இவ்விழா தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கல்துரையாடல்களுக்கு அமைவாக சகல எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன் நிர்வாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இச்சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இங்கு வரும் பக்தர்களுக்கு அன்ன பூரணி அன்னதான தொண்டர் சபை இ மகா சிவராத்திரி மட பரிபாலன சபை இ இராஜகணபதி அறக்கட்டளை . மாதுவட்டான் மணி மண்டபம் இ மற்றும் சிவபூமி அன்னதான தொண்டர் சபை ஆகியன அன்னாதானம் வழங்குவதற்றாகன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்துடன் அங்கர் பால்மா கம்பனி இ இலங்கை போக்குவரத்து சபை இ இலங்கை வங்கி . நீர்பாசன திணைக்களம் இ பாலாவி சேவா சங்கம் நீர் வழங்கல் வடிகால் சபை மற்றும் கட்டிடத் திணைக்களம் ஆகியன தாகச் சாந்தி வழங்குவதற்கான நட்வடிக்கைளும் முன்னெடுத்துள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஏழு வருடங்களாக இவ் ஆலயத்தில் புனரத்தான வேலைகள் இடம்பெற்றமையால் இவ் கோவிலில் 2022 ஆம் ஆண்டு வரை பாலாலயம் அமைத்து சுவாமிகள் வழிபட்டு வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இவ்சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த வருடம் சிவராத்திரி விழாவுக்கு சுமார் ஐயாயிரம் பக்கதர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இவ்வருடம் இத் தொகை அதிகரிக்க வாயப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் வருடமும் வழமைபோன்று வடக்கு பகுதியில் மட்டுமல்ல இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் பெருந் தொகையான பக்தர்கள் கலந்துகொள்ள வருகைதர இருப்தாக எதிர்பார்க்;கப்பட்ட நிலைலேயே இவ் ஆய்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.