எம்.ஏ.ஏ.அக்தார்)
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “அவளுடைய பலம்-நாட்டிற்க்கு முன்னேற்றம்.” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் விற்பனைக் கண்காட்சியும் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கலாச்சார மண்டபத்தில் வெரு விமர்சையாக நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு யூ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்ரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனுஜா, முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் பணிப்பாளர் சல்மா ஹம்ஸா மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எம்.எல்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜறூப். சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பீ.ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், சமுர்த்தி வங்கி மற்றும் அமான வங்கி முகாமையாளர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அழைப்பு அதிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நூறு பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் ,உணவு பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்பட்டது.
இதன் போது சிறு தொழில் முயற்சியில் முன்னேறி மேலும் பலருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த பெண் சுய தொழில் முயற்சியாளர்கள் இதன் போது கெளரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.





