கிழக்கு மாகாண ஆளுனருக்கும் கடற்றொழில் அமைச்சருக்குமிடையில் சந்திப்பு.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
திருகோணமல் பொது மீன் சந்தை,  கிண்ணியா மீன் சந்தை தொடர்பாக இச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், மட்டக்களப்பு வட்டவான் , கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களில் இறால் பண்ணை தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின் போது திருகோணமலை நகரசபை செயலாளர்,கிண்ணியா நகரசபை செயலாளர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,  அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், இலங்கை மீன்பிடிக்கூட்டுத்தாபன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.