அக்கறைப்பற்று இராமகிருஷ்ண கல்லூரிக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு.

(நூருல் ஹுதா உமர் )  இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி (தேசிய பாடசாலை) யில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் க.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

கல்விக்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்றும் “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் சி.மதியழகன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.பி. அகிலன், பழைய மாணவர் சங்க உறுப்பினர் வி. சுகிர்தகுமார், எல். லக்மிகாந், பாடசாலை ஆசிரியர்களான செவ்வேல் குமரன், சுதர்சன், கின்ஸ்லி, சத்தியராஜ், அற்புதநாதன், திருமதி எல். திருச்செல்வம், திருமதி எம். ஜீவிதா, பாடசாலை உத்தியோகத்தர்களான எம்.எம்  பத்திமா ரோசானா, திருமதி கே. கிரியாழினி, இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ. கஜரூபன், சி.காந்தன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.