(அஸ்ஹர் இப்றாஹிம்) தெஹிவல மேம்பாலத்திற்கு அருகில் கடந்த 29 ஆம் காலை 7.35 மணியளவில் இரண்டு பஸ்கள் போட்டிக்கு ஓடியதில் இரண்டு பஸ்களுக்கு மத்தியில் பயணித்த முச்சக்கர வண்டி அதற்குள் அகப்பட்டதில் முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்கிசை டெம்பிள் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய அன்டன் கிறிசாந்த ஆவார்.
அவர் உயிரிழப்பதற்கு சற்று முன்னர் அவரது மனைவி தெஹிவல பஸ் நிலையத்தில் இறங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – மொரடுவ மற்றும் அங்குலான – ஹெட்டியாவத்த பஸ் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பந்தமாக தெஹிவல போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.