க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கல்வி அமைச்சினால் இம்முறை க.பொ.த(உ/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான 3 மாத தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட இருக்கின்றது.
 இந்த நிகழ்விற்கு முன்னோடியாக பிரதேச செயலகத்தில்  கடமையாற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பயிற்றுனர்களை பயிற்றுவிக்கும்  மட்டக்களப்பு SMART SRILANKA அலுவலகத்தில் கல்வி அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டு உதவி மாவட்ட செயலாளரின் வழிகாட்டலில் நடைபெற்றது
இந் நிகழ்விற்கு வளவாளர்களாக அமைச்சினால் பயிற்றுவிக்கப்பட்ட பயிற்றுனர்களான மாவட்ட இணைப்பாளர் க.சிவகுமார், திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.திபாகரன் ஆகியோர் பங்குபற்றினர்.