( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் இரனைஇலுப்பைக்குளத்தில் 2023 2024 ஆம் ஆண்டு காலபோக நெற் செய்கையின் நெல் அறுவடை விழா புதன்கிழமை (28) காலையில் நடைபெற்றது.
அப்பகுதி விவசாய அமைப்பின் தலைவர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இங்கு சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சாகீரா பானு , கமநல சேவை உதவி ஆணையாளர் , மடு பிரதேச செயலாளர் வைத்திய அதிகாரி உட்பட கலந்து கொண்ட பலர் இந்த அறுவடையில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதி விவசாயிகள் தாங்கள் மேற்கொண்ட வேளாண்மையில் பெரும் பாதிப்பை சந்தித்திருந்தனர். ஆனால் இம்முறை ஓரளவு வெள்ளாமையில் பலன் அடைவதாலேயே இம்முறை அறுவடை விழாவை சிறப்பாக செய்வதாகவும் தெரிவித்தனர்.