(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) அஸ்வெசும பயனாளிகளுக்கு பயன்தரும் பயிர்க் கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (27) திகதி இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பயன்தரும் பயிர்க் கன்றுகளை வழங்கி வைத்தார்.சமுர்த்தி அபிவிருத்தி தினணக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொண்ட இந் நிகழ்வில் மாவட்ட செயல பிரதம கணக்காளர் எஸ்.எம். பஸிர், சிரேஸ்ட சமூர்த்தி முகாமையாளர் மனோகிதராஜ், அஸ்வெசும பயனாளிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு வீட்டுத்தோட்டத்தை அமைத்து உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.