15 இலட்சம் ருபா பெறுமதி வாய்ந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பு.

(க.ருத்திரன்.) மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் முகமாக 15 இலட்சம் ருபா பெறுமதி வாய்ந்த ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் இன்று -27 கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனையின் பேரில் இவ் உதவியினை கொழுமபு விதுள் லங்கா நிறுவனத்தினர் பாடசாலை அதிபர் க.கதிர்காமநாதனிடம் வழங்கி வைத்தனர்
போட்டோ பிரதி இயந்திரம்,மடிக் கணினி, மற்றும் தளபாடங்கள் என்பன வழங்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கல்குடா பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.ஜெயவதனன்,கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜெயக்குமணன், விதுள் லங்கா நிறுவனத்தின் பொறியியலாளர்களான ஹிமால் டிலான் பெனாண்டோ,லால் குணரட்ன,திட்ட முகாமையாளர்களான சித்தி மற்றும் சாபீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.