( வி.ரி. சகாதேவராஜா) உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தால் அண்மையில் சமூக சேவைக்கான கலாநிதி பட்டம் பெற்ற முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு நேற்று (26) திங்கட்கிழமை பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து பாரிய வரவேற்பையும் கௌரவிப்பையும் நடத்தினார்கள்.
சபையில் கலாநிதி பட்டம் பெற்ற ஜெயசிறிலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி சேவையை வியந்து பாராட்டி பேசினார்கள் .
அவரது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த கலாநிதி பட்டம் என்பதை பலரும் பங்கு உச்சரித்தார்கள். இறுதியில் கலாநிதி ஜெயசிறில் ஏற்புரை வழங்கினார்.