மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் ஜோடி ஐந்தரை மாதக் குழந்தையை வீட்டில் தவிக்கவிட்டு தலைமறைவு.

(அஸ்ஹர் இப்றாஹிம்)    கண்டி,கலஹா, லூல்கந்துர தோட்டப்புற வீடொன்றில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் ஜோடி ஐந்தரை மாதக் குழந்தையை வீட்டில் விட்டு தலைமறைவான சம்பமொன்று கலஹா பொலிஸில் பதிவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த இளம் ஜோடி ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தை ஒன்றுடன் தற்காலிகமாக வசிப்பதற்காக இந்த தோட்டத்திற்கு வந்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த போது பழகிய நபரொருவருக்கு தொலைபேசியில் தாங்கள் இருவரும் வெளிநாடு செல்வதால் வீட்டிலுள்ள குழந்தையை வளர்க்க யாரிடமாவது கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கலஹா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குழந்தையை கலஹா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.