திருகோணமலை மாவட்டம்,கிண்ணியா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ள ஆலங்கேனி ஶ்ரீ மஹா விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா 2024/02/24 ஆம் நாள் அன்று நடைபெற்றது. இக் கோவில் திருவிழாவை ஒட்டி கிண்ணியா பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் பயிலும் மாணவரிடையே பேச்சு, கவிதை, கட்டுறை, நாடகம், நடனம் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தார். அத்தோடு மேற்படி திருவிழாவை சிறப்பான முறையில் நடத்திய சைவக் குருமாரையும் கௌரவித்தார்.