ரஷ்யா நேட்டோவில் இணைய அமெரிக்கா தடுத்ததா?

பொறிஸ் ஜோன்சன் அமைதி பேச்சை எதிர்த்தாரா?
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
 
(டக்கர் கார்ல்சனின் நேர்காணலில் புட்டின் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யா நேட்டோவில் இணைய அமெரிக்கா தடுத்தது என்றும், பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் அமைதி பேச்சுவார்த்தையை எதிர்த்தார் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்)

 
2022 பிப்ரவரி 24இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த போரில், ரஷ்யா பல சவால்களை சந்தித்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும், உக்ரைனில் பல முக்கிய இடங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு:
உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வொக்ஸ் நியூஸ் பத்திரிக்கையாளர் டக்கர் கார்ல்சனுக்கு அளித்த பேட்டியில் புட்டின் இந்த கருத்தை தெரிவித்தார்.
உக்ரைனுடனான போர் தொடங்கி இரண்ட ஆண்டுகள் ஆகிறது. உக்ரைனில் உள்ள ரஷ்ய குடிமக்களைப் பாதுகாக்க போர் என்று அவர் கூறினார். உக்ரைன் நேட்டோவில் இணைவதைத் தடுக்க இந்தப் போர் அவசியம் என்றும் புட்டின் கூறினார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று கூறிய புட்டின், அவரை பேச்சுவார்த்தைக்கு வர வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தையை நோக்கி நாட்டை வழிநடத்த வேண்டும்.
உக்ரைனை ஆதரித்து ரஷ்யாவுக்கு தீங்கு செய்ய நினைக்கும் மேற்கத்திய நாடுகளின் திட்டம் ஒருபோதும் பலிக்காது என்றார் புட்டின்.
மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டம்:
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பாரிய அளவில் உதவி வருகின்றன.
அத்துடன் பல நாடுகள் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன. ஐ.நா.வின் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபை ரஷ்யாவை பெருமளவில் தனிமைப்படுத்தியது.
இந்த நிலையில் நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை நன்கொடையாக வழங்கியுள்ளன. அவர்கள் பல்லாயிரக்கணக்கான டொலர்களை ஆயுதங்களாக அனுப்புகிறார்கள். இது உண்மையில் போரில் பங்கேற்பதாகும். இதன்மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளன என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வழங்கிய நேர்காணலில் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா நேட்டோவில் இணைய அமெரிக்கா எதிர்ப்பு:
டக்கர் கார்ல்சனுக்கு அளித்த பேட்டியில் நீங்கள் நேட்டோவில் இணைந்திருப்பீர்களா எனக் கேட்ட போது, அதற்கு விளாடிமிர் புட்டின், எனக்கு கிடைத்த பதில் இல்லை என்றும், ரஷ்யா நேட்டோவில் இணைய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் முந்தைய வரலாற்றில் இருந்து பல உண்மைகளை தெளிவுபடுத்மியுள்ளார்.
ஆனால் அவர்கள் அமெரிக்கா ஆம் என்று கூறியிருந்தால், நீங்கள் நேட்டோவில் இணைந்திருப்பீர்களா? டக்கர் கார்ல்சன் கேட்ட போது, அதற்கு புட்டின், அவர்கள் ஆம் என்று கூறியிருந்தால், நல்லுறவு செயல்முறை தொடங்கியிருக்கும், இறுதியில் எங்கள் கூட்டாளர்களின் தரப்பில் சில நேர்மையான விருப்பத்தை நாம் கண்டிருந்தால் அது நடந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் மேற்குலகம் உங்களை ஏன் மறுத்தது என்று நினைக்கிறீர்கள்? ஏன் விரோதம்? பனிப்போரின் முடிவு ஏன் உறவை சரிசெய்யவில்லை? என டக்கர் கார்ல்சன் புட்டினிடம் கேட்ட போது, ரஷ்யா மிகப் பெரிய நாடு, அதன் சொந்த கருத்து பல உளலளது. மற்றும் அமெரிக்கா – நேட்டோவில் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மேலும் நேட்டோ உறுப்பினர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு கண்ணை மூடிக்கவண்டு கீழ்ப்படிதலுடன் வாழ்கிறார்கள்.
2008 இல் உக்ரைனுடன் என்ன நடந்தது என்பதை சொல்கிறேன் என புட்டின் பல வரலாற்று தகவல்களை விளக்கினார். மத்திய கிழக்கில் நடந்த நிகழ்வுகள், ஈராக்கில் போர் நிகழ்ந்த போது, நாங்கள் அமெரிக்காவுடன் மிகவும் மென்மையாகவும், விவேகமாகவும், எச்சரிக்கையாகவும் உறவுகளை வளர்த்துக் கொண்டோம்.
ரஷ்யாவின் வடக்கு காக்சஸில் பிரிவினைவாதத்தையோ அல்லது பயங்கரவாதத்தையோ அமெரிக்கா ஆதரிக்கக் கூடாது மீண்டும் மீண்டும் வேண்டினேன். ஆனால் அவர்கள் அதை எப்படியும் தொடர்ந்து செய்தார்கள். அரசியல் ஆதரவு, தகவல் ஆதரவு, நிதி ஆதரவு, இராணுவ ஆதரவு கூட அமெரிக்காவிடமிருந்தும் காகசஸில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்ந்து வந்தது.
2010 அமெரிக்க அதிபரிடம் ஒருமுறை இந்தப் பிரச்னையை எழுப்பினேன். சிஐஏ அதற்கு பதிலளிக்கையில், நாங்கள் ரஷ்யாவில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இது சரியான செயல் என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம் என பெரும் அபத்தமாக கூறினார்கள்.
பிரிட்டன் பிரதமர் ஜோன்சனின் அமைதி பேச்சுவார்த்தை எதிர்ப்பு:
மேலும், உக்ரைன் அதிபர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்து, பிரிட்டன் பிரதமர் ஜோன்சனே ஆவார். அமைதி பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பை காட்டினார்.
ரஷ்யா ஒருபோதும் பேச்சுவார்த்தைகளை நிராகரித்ததில்லை. நாங்கள் மறுக்கவில்லை. பகிரங்கமாக மறுத்தவர்கள் அவர்கள் தான்.
உக்ரைன் அதிபர், பிரிட்டனின் முன்னாள் பிரதமர். திரு. ஜோன்சனின் கோரிக்கை அல்லது வற்புறுத்தலுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் என்பது எனக்கு கேலிக்குரியதாகவும் மிகவும் வருத்தமாகவும் தெரிகிறது. இந்தப் போரை ஒன்றரை வருடங்களுக்கு முன்பே நாம் நிறுத்தியிருக்கலாம்.
திரு. ஜோன்சன் இதற்கு தடை விதித்ததால் அங்கே மேலும் போர் தொடர்கிறது.
ஏன் அப்படிச் செய்தார் என டக்கர் கார்ல்சன் கேட்ட போது, ஏதோ ஒரு காரணத்திற்காக, ரஷ்யாவை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியும் என்ற மாயை அனைவருக்கும் இருந்தது. ஆணவத்தின் காரணமாகவும்,  ஆனால் சிறந்த புத்திசாலித்தனத்தால் அல்ல என்றும் புட்டின் பதிலளித்தார்.