மாணவர்களுக்கான 150 இற்கும் மேற்பட்ட கற்றல் உபகரணங்களை தயாரித்து முன்மாதிரியான பட்டிருப்பு , களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலய ஆசிரியர்கள்.

(அஸ்ஹர் இப்றாஹிம்) மட்டக்களப்பு ,பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலய அதிபர் நாகமணி ராமேஸ்வரன்  தலைமையிலான அவரது ஆசிரியர் குழாம் 150 இற்கும் மேற்பட்ட ஆரம்பக்கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல்  உபகரணங்களைத் தயாரித்துள்ளனர்.
பட்டிருப்பு வலயத்திலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கு இதுவொரு நல்லதொரு முன்மாதிரியும் , கூட்டு முயற்சியுமாகும் என பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  திரு.சிவானந்தம் சிறிதரன்  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழாம், ஏனைய கல்விசரா ஊழியர்கள் குழாம் அனைவரும் பங்காளிப்புச் செய்வார்களேயானால் பட்டிருப்பு கல்வி வலயம் சிறந்த அடைவு மட்டத்தைப் பெற முடியும் என வலய கல்விப் பணிப்பாளர் மேலும் நம்பிக்கை  தெரிவித்தார்.