கார்மேல் பற்றிமா கல்லூரியில் கால்கோள் விழா.

( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் தரம் 1 மாணவர்களை உள்ளீர்க்கும் கால்கோள் விழா நேற்று (21) வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். ஜாபீர் கலந்து சிறப்பித்தார்.
மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் மேடையேறின.