காரைதீவில் பால் நிலை சமத்துவம் தொடர்பான கலந்துரையாடல்.

(எம்.எம்.றம்ஸீன்) பால் நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு பால்நிலை தொடர்பான பிரச்சினைகள் இனம்காட்டப்பட்டு இதற்கான தீர்வு தொடர்பான முன்வைப்புக்களும் பலராலும் முன் வைத்து கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் பல்வேறு சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,  சுகாதார வைத்திய அதிகாரி , பொலிஸ் நிலைய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.