மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருட மாசிமக மஹோட்சவ பஞ்சரத பவனி.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மஹோட்சவ பஞ்சரத பவனி எதிரவரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
மஹோட்சவத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி விஷேட பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித  பண்டார தென்னக்கோன் ,ஆலய அரங்காவலர் சபைத்தலைவர் பீ.தர்வானந்தா தலைமையிலான சபை உறுப்பினர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இடை‌யிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாத்தளை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரோஹன கமகே,  கஜபா இராணுவ படையின் கேர்னல் சில்வா உட்பட பல பாதுகாப்பு படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்  போது மஹோட்சவ தினங்களில் மாத்தளையில் பொலிஸார்,  இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு கடமைகளில் அமர்த்தப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹோட்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு சமய பூஜை நிகழ்ச்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.