(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரணுக்கும் சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவனமான IOM ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையலான விசேட சந்திப்பு நேற்று (20) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட கலந்துரையாடலின்போது இடப்பெயர்விற்கான சர்வதேச அமைப்பாகிய IOM நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் முறையான இடப்பெயர்வு தொடர்பாக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் இவ்வமைப்பு நல்லினக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தற்போது நடைமுறைப்படுத்தி வருவதுடன் எதிர்காலத்தில் தனிநபரல்லாத சமுக மட்ட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர ஆர். ஜதீஸ்குமார், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் என். நவனீதன் IOM நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.