(கனகராசா சரவணன்)
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக சவப் பெட்டியுடன் இரண்டாவது நாளாக தொடர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவந்தவர்களின் இருவரது கோரிக்கையை பிரதேச செயலாளர் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஏற்றுக் கொண்டு போராட்ட இடத்திற்கு சென்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்ததையடுத்து உண்ணாவிரத போரட்டத்தை கைவிட்டதையடுத்து அவர்களுக்கு பிரதேச செயலாள் யூஸ் கொடுத்து; முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் அதிகார துஸ் பிரயோத்துக்கு ஆளாகாமல் செங்கலடி. அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறு கோரியும் கல் மண் கிறல் ஆகழ்வில் சட்டரீதியாக ஈடுபடுவரும் இருவர் சவப்பெட்டியுடன் மட்டு செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரதே போரட்டம் ஒன்றை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றுவந்த போராட்ட இடத்திற்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், உதவி செயலாளர் ரணில் 2024 செயலணி கிழக்குமாகாண தலைவர் க. மோகன் உள்ளிட்டோர் சென்று உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இனி அரசியல் தலையீடு இன்றி கல், மண், கிறவல் என்பனவற்றுக்கு சட்டரீதியாக அனுமதி பெற்று அகழ்வில் ஈடுபட்டுவருபவர்களுக்கு புதிப்பித்தல் போன்ற நடவடிக்கையை செய்து தரவுதாக உத்தரவாம் அளித்தார்
இதனை தொடர்ந்து உண்னாவிரத போரட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரதேச செயலாளர் யூஸ் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.