வரட்சிக் காலத்தில் தென்னம் ஓலைகளில் நோய் பீடை ஏற்படுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பணிப்பாளர் திருமதி அ.சகிலா பானு

( வாஸ் கூஞ்ஞ)

வரட்சியான காலக்கட்டத்தில் தென்னம் மரங்களுக்கு ஒருவித பீடை நோய் தொற்ற ஆரம்பித்துள்ளது. ஆகவே இத் தாக்கத்தை கண்ணுறுபவர்கள் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இந்நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அ.சகிலா பானு இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது நிலவி வருகின்ற வரட்சியான காலத்தில் தென்னையில் ஒரு விதமான பீட நோய் தொற்றத் தொடங்கியுள்ளது.

அதாவது வெண்ணித் தாக்கம் என அழைக்கப்படுகின்ற இது தென்னம் ஓலையின் கீழ் பகுதியில் பஞ்சு போன்ற பதார்த்தம் காணப்படும்.

இது அந்த நோய்க்குரிய முட்டைகளாகக் காணப்படுகின்றது. இந்த நோய் ஏற்படும் பட்சத்தில் தென்னம் ஓலைகளின் சார்களை உறுஞ்சுவதால் பச்சிளம் இல்லாத நிலையில் ஒளித் தொகுப்பு ஏற்பட முடியாத நிலை தோன்றுகின்றது.

அத்துடன் இந்த வெண்ணிக்களிலிருந்து சுரக்கப்படும் திரவத்திலிருந்து இரண்டாவது தொற்றாக கறுப்பு நிற பங்கசுகள் பச்சியத்துக்கு மேலே காணப்படுவதால் இங்கும் ஒளித் தொகுப்புக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

இதனால் உற்பத்தி திறன் குறைவடைந்து செல்லுகின்றது. இந்த நோய் தொற்றும் காலம் சுமார் ஐந்து ஆறு மாதங்களுக்கு தொடரும் நிலை காணப்படுகின்றது.

இந்த பீடையானது தென்னம் மரத்துக்கு மாத்திரம் அல்ல மாறாக தென்னம் மரத்துக்கு அருகாமையிலுள்ள அனைத்து பயிர் இனம் மற்றும் மரங்களுக்கும் இது பெரும் பாதிப்புக்களை எற்படுத்தும் நிலையும் உண்டு.

இவ்வாறான நிலைமையை நாம் காணும் பட்சத்தில் இதற்கு மருந்து ஏதும் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக வெறும் தண்ணீரை ரொக்கீஸ் என்ற ஸ்பிரே மூலம் அதிவேகத்தில் தென்னம் ஓலைகளுக்கு அடிக்க வேண்டும்.

இதனால் ஓலைகள் கழுவப்பட்டு விடும். இதை நாம் கடைப்பிடிக்காது விட்டோமென்றால் ஒரு பூச்சி ஒரு வாரத்துக்குள் நூறு முட்டைகளை ஈன்று விடும்.

இதனால் குறுகிய காலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து விடும். தண்ணீரால் ஓலைகளை கழுவுவதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் மரத்துக்கு கீழே வேப்பங் கொட்டை அல்லது குப்பைகளை போட்டு நெருப்பை எரிக்காது புகையூட்ட வேண்டும்.

இதனால் இந்த பூச்சுக்கள் இல்லாது ஒழிக்கலாம். அல்லது தொட்டம் தொட்டமாக ஒளிப் பொருட்களை வைத்து இந்த பூச்சிகளை கவர்ந்து எடுத்து அழிக்கக்கூடிய வாயப்புக்களும் உண்டு.

ஆகவே இதை நாம் கடைப்பிடிக்கும் பட்சத்தில் தென்னம் மரங்கள் மற்றும் ஏனைய பயிர்களையும் நாம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஆகவே இந்த நோய் பீடையை கண்ணுற்றால் மன்னார் மாவட்ட செயலகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் மாவட்ட விவசாய அலுவலகத்திலோ அல்லது விவசாய போதனா ஆசிரியர்கள் அல்லது தென்னம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகிய தொழில் நுட்பம் கொண்டவர்களுடன் உரையாடி இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அ.சகிலா பானு இவ்வாறு தெரிவித்தார். (