இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் இராமர் அணையில் இடம்பெற்ற விஷேட பூஜையில் கலந்து கொண்டார்

( வாஸ் கூஞ்ஞ)

இலங்கைக்கான இந்திய புதிய உயர் ஸ்தானிகர் வடக்கு மாகாணத்துக்கு மேற்கொண்டுள்ள உத்தியோக பூர்வ விஜயத்தின்போது மன்னாருக்கும் இவர் விஜயம் மேற்கொண்டு மீனவ அமைப்புகளுக்கு அன்பளிப்பு வழங்கியதுடன் இராமர் அணையில் விஷேட பூஜையிலும் கலந்து கொண்டார்.

கடந்த வியாழக்க்கிழமை (15) இந்திய உயர் ஸ்தானிகர் எச்.ஈ.சந்தோஷ்சா ஜா தனது பாரியாருடன் மன்னாருக்கு முதல் முறையாக வருகை தந்திருந்தபொழுது மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு சிறு அன்பளிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இங்குள்ள நான்கு மீனவ அமைப்புகளுக்கு குளிர் சாதனப் பெட்டிகள் மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகவேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் கையளித்தார்.

தலா சுமார் ரூபா ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான குளிர்சாதனப் பெட்டிகளை முசலி . நானாட்டான் , மன்னார் மற்றும் விடத்தில்தீவு ஆகிய நான்கு மீனவ சமாசங்களுக்கு இவைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இந்திய உயர் ஸ்தானிகர் கொண்ட குழுவினர் தலைமன்னார் இராமேஸ்வரத்துக்கு இடையில் காணப்படும் இராமர் அணை என அழைக்கப்படும் தீடையின் இரண்டாம் மணல் திட்டியில் நடைபெற்ற விஷேட பூஜை ஒன்றில் கலந்து கொண்டனர்.

இந்த விஷேட பூஜையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும். எனவும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடல் போக்குவரத்து சுமூகமான முறையில் இடம்பெறவும் திட்டமிடப்பட்ட முறையில் போக்குவரத்துக்கான பாதை அமைய வேண்டும் என்ற பிராத்தணையாக இராமர் அணையில் இவ்விஷேட பூஜை மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர குருக்கள் சிவ ஸ்ரீ தியாகராஜா கருணானந்தன் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.