( வாஸ் கூஞ்ஞ) 19.02.2024
அரசு பொது மக்களிடம் உள்ள ஆயுதக் கலாச்சாரத்தை உடன் நிறுத்தக் கோரி வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். கொலையில் ஈடுபடும் நபர்கள் இனம் காட்டப்பட்டும் சட்டத்திலிருந்து இவர்கள் தப்பித்து வருவதால் ஒரு கிராமம் தொடர்ந்து அல்லோலகல்லோலப் படுகின்றது என கவனயீப்பு போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் உயிலங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற துவக்குச் சூட்டு சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே திங்கள் கிழமை (19) காலை மன்னார் மதவாச்சி பிரதான வீதியை மறித்து நொச்சிக்குளம் பகுதியில் மக்கள் போராட்டத்தில் இறங்கி இலுந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது
திங்கள் கிழமை (19) காலை 8 மணியளவில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டர் பைசிக்கலில் வந்த இரு நபர்கள் ஒரு ஏகே என்ற பெரிய துவக்கின் மூலம் அந்த விவசாயி மீது சுட்டபோதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கடந்த சில காலமாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி இது வரை மூவர் இறந்துள்ளதாகவும்
இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப்பட்டும் அதையும் மீறி கொலை கலாச்சாரம் தொடர்வதாக தெரிவித்தே இன்றைய (19) நாளில் இவ்வூர் மக்கள் கையில் பதாதைகள் ஏந்தி வீதி மறியல் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
இவர்கள் எந்தியிருந்த பதாதைகளில் ‘கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யர்?’ ‘எங்களை பாதுகாப்பது அரசின் கடமை’ ‘எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்’ எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.
இத் துவக்குச் சூட்டு சம்பவம் தொட்hபாக சந்தேக நபர்கள் இனம் காட்டப்பட்டதாக பாதிப்படைந்தவர்கள் தெரிவித்தும் நிற்கின்றனர்.
இது தொடர்பாக தற்பொழுது உயிலங்குளம் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.