ஒழுவில் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவரை காணவில்லை

– யூ.கே. காலித்தீன் –
இன்று (16.02.2024) மாலை ஒலுவில் கடலில் குளிக்க சென்ற சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காட்டு பிரதேசங்களைச் சேர்ந்த 08 மாணவர்கள் குளிக்கச் சென்ற வேலையில் 02 மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போய் உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முஹம்மட் இல்ஹாம் (15), மாளிகைக்காட்டு பிரதேசத்தை  சேர்ந்த என்.எம். முன்சிப் (15) வயது  ஆகிய மாணவர்களை தேடும் நடவடிக்கை தீவிரமாக இடம் பெற்ற போதிலும் 02 மாணவர்களின் சடலங்கள் இது வரை கிடைக்கவில்லை
மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.