முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்காவில் உள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் (SCA) பிரதி உதவி செயலாளர் அஃப்ரீன் அக்தர் ஆகியோர் இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்படும் புதிய கூட்டணி குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது