3 வீதமான பிள்ளைகள்  கல்வியை இழந்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு சரியான கல்வியைக் கூட வழங்க முடியாத அரசாங்கமொன்று ஏன்  இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறும் பிரகாரம்இ வங்குரோத்து நிலை நாட்டில் 54மூ பாடசாலை மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளில் 3மூ ஆனோர் பாடசாலை  செல்வதை நிறுத்திவிட்டனர். மேலும் பல மாணவ மாணவிகள் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்தார்.

41 இலட்சம் மாணவச் செல்வங்களின் நலனில் அக்கறை செலுத்த முடியாவிட்டால் கல்வி அமைச்சும் அரசாங்கமும் இருப்பதில் அர்த்தமில்லை.பிள்ளைகளையும் தாய்மார்களையும் பாதுகாத்து குடிமக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.ஆனால் தற்போதைய அரசாங்கம் அதை செய்யவதாக  இல்லலை. பாதிப்புக்குள்ளான சகல தரப்பினரையும் உள்ளடக்கி அவர்களைக் கவனித்துக் கொள்ளும் வகையில் சமூக பாதுகாப்பு வலயத்தை தயாரித்து  சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான முன்னெடுப்பொன்று நடப்பதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 98 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் இரத்தினபுரிஇ பெல்படுல்ல விஜயபா மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வங்குரோத்தான நாட்டில் யாரால் பணியாற்ற முடியும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். கட்சி வேறுபாடின்றி யாரால் பணியாற்ற முடியும் என்பதை மக்களே கண்டறிய வேண்டும். அதிகாரம் இல்லாமலே மக்களுக்கு சேவை செய்து வருகின்றவர்கள் யார்? நாடு பூராகவும் சென்று வாய்ப்பேச்சில் வீராப்பு காட்டி வருபவர்கள் யார்  என்பதை மக்களே புத்திசாலித்தனமாக சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.