இராணுவத்தினரால் இரண்டாம் கட்டமாக ஆழ்ந்த சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கு பால்மா பொதிகள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் ஆழ்ந்த சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கான பால்மா பொதிகள் இராணுவத்தினரால்  வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வா (14)நேற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு 233 இலக்க இராணுவ படையின் அனுசரணையுடன் நடைபெற்றது.

இதன்போது செங்கலடி பிரதேசத்திலுள்ள பத்து கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆழ்ந்த சிக்கலில் உள்ள 293 பயனாளிகளுக்கு இப்பால்மா பொதிகள் தலா ஒவ்வொரு பயனாளிக்கும் 400கிராம் பொதிகள் தலா இரண்டு வீதம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவத்தினர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.