மட்டக்களப்பு பாலமீன் மடு, திராய்மடு மீனவ சங்கத்தின் தலைவர் வி.மனோகரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மீனவ சங்க உறுப்பினர்களின் குடும்பத்தவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பாலமீன்மடு, திராய்மடு மீனவ சங்க உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் நீதி அனுசரணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் போதிகள் 250 சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பல வருடங்களாக முகத்துவாரத்தீனுடாக செல்லும் மீனவர்களின் இறப்பை தவிர்ப்பதற்கு முகத்து வாரத்தினை ஆழப்படுத்தி தருமாறு மீனவர்கள் இதன் போது அரசாங்க அதிபருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந் நிகழ்வில் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யூ.பி விமலரத்ன, பொலிஸ் பரிசோதகர் பி. சசிந்திரா மீனவ சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.